ஆரம்பமே அமர்க்களம்: 'விராட்' அணியை வீழ்த்தி... கேப்டனாக முதல் வெற்றியை ருசித்த 'தினேஷ்'
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 08, 2018 11:56 PM
புகைப்பட உதவி @IPL
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான 3-வது ஐபிஎல் ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்குத் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, 176 ரன்களை கொல்கத்தா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
இதனைத் தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு, சுனில் நரைனின் அரைசதம்(17பந்துகள்) பெரிதும் கைகொடுத்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள்(6) வீழ்ந்தாலும் பொறுப்பாக இறுதிவரை களத்தில் நின்ற கேப்டன் தினேஷ் கார்த்திக், 18.5 வது ஓவரில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார்.
இதன் மூலம் 4விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் வெற்றியை ருசித்துள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'நாங்க திரும்பி வந்துட்டோம்னு சொல்லு'... மும்பையில் கர்ஜித்த சென்னை சிங்கங்கள்!
- 'சென்னைக்கு' மும்பை நிர்ணயித்த 'டார்கெட்' இதுதான்.. சாதிக்குமா தோனி படை?
- Mumbai Indians Vs Chennai Super Kings - 1st Innings Highlights
- சிங்கம் போல 'சீறும் சென்னை' பவுலர்கள்.. அடுத்தடுத்து 'விக்கெட்டு'களைப் பறிகொடுத்த மும்பை!
- MI vs CSK: Highlight points