தோனியின் சென்னையைப் 'பழிதீர்க்குமா' கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ்?
Home > News Shots > தமிழ்By Manjula | May 05, 2018 04:06 PM

ஐபிஎல் போட்டியின் 35-வது ஆட்டம் இன்று மாலை 4 மணியளவில் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் அரங்கில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. முதல் போட்டியில் சென்னை அணியிடம் அடைந்த தோல்விக்கு பழிவாங்க பெங்களூர் முயற்சிக்கும். அதேநேரம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட சென்னை அணியும் முயற்சிக்கும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாடும் இரு அணி வீரர்களின் விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, எம் எஸ் தோனி(கேப்டன்), ஹர்பஜன் சிங், டிஜே பிராவோ, டி சோரே, ஆர் ஜடேஜா, டி வில்லி, எஸ் தாகூர், லுங்கி நிகிடி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: பார்த்திவ் படேல், பிரண்டன் மெக்கல்லம், மன்தீப் சிங், சி டி கிராண்ட்ஹோமி,விராட் கோலி(கேப்டன்), ஏ பி டிவிலியர்ஸ், எம் அஸ்வின், டி சவுத்தி, உமேஷ் யாதவ், யஷ்வேந்திர சாஹல், முஹம்மது சிராஜ்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- Another Chris Gayle show leads KXIP to a comfortable total
- 'சிங்கிள்' பவுண்டரி கூட அடிக்க விடாமல்.. 'தோனி'யை தொடர்ந்து அச்சுறுத்தும் பவுலர்!
- 'யாருமே ஒழுங்காக பந்து வீசவில்லை'.. கடும் விரக்தியில் தோனி!
- IPL playoffs shifted from Pune to this state
- He’s just so much like Sachin Tendulkar: Ex-Aussie batting great about Prithvi Shah