சென்னை 'கிங்ஸ்க்கு' பெரிய விசில் அடிங்க...140 ரன்களுக்கு 'சுருண்டது' ராஜஸ்தான்!
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 20, 2018 11:53 PM
புனேயில் இன்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்களைக் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஷேன் வாட்சன்(106) ரன்களும், சுரேஷ் ரெய்னா 46 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 18.3 ஓவர்களில் வெறும் 140 ரன்களுக்கு சுருண்டது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 45 ரன்களும், பட்லர் 22 ரன்களும் எடுத்தனர்.
இதனால் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சன் ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி, முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Chennai Super Kings won by 64 runs | தமிழ் News.