'நாங்க திரும்பி வந்துட்டோம்னு சொல்லு'... மும்பையில் கர்ஜித்த சென்னை சிங்கங்கள்!
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 08, 2018 12:04 AM
வான்கடே மைதானத்தில் சென்னை-மும்பை அணிகள் இடையிலான முதலாவது ஐபிஎல் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 165 ரன்களைக் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கர்ணால் பாண்ட்யா 41 ரன்களையும், இஷான் கிஷான் 40 ரன்களையும் குவித்தனர்.
சென்னை அணி சார்பில் சாகர் ,தாஹிர் தலா 1 விக்கெட்டுகளையும் வாட்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தொடக்கத்தில் வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி உள்ளிட்ட முக்கிய வீரர்களை இழந்து சென்னை அணி தடுமாறியது. ஒருகட்டத்தில் பந்துகள் கைவசம் இருந்தாலும் 7 விக்கெட்டுகளை இழந்ததால், வெற்றிவாய்ப்பு மும்பைக்கு அதிகமாக இருந்தது.
ஆனால் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ மும்பையின் வெற்றிக்கணக்கை பெரிதும் தகர்த்தார்.30 ரன்களில் 68 ரன்களைக் குவித்த பிராவோ 18வது ஓவரின் 5-வது பந்தில் பும்ரா ஆட்டமிழக்கச் செய்தார். அப்போது அணியின் ஸ்கோர் 159ஆக இருந்தது.
19.4-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 165ஆக இருந்தது. 2 பந்துகள் மிச்சமிருந்தன. இதனால் ஆட்டத்தில் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், 5-வது பந்தில் கேதார் ஜாதவ் அபாரமாக ஒரு போர் அடித்து சென்னை அணிக்கு வெற்றியைப் பரிசளித்தார். இதன் மூலம் 1 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி திரில் வெற்றியை ருசித்தது.
புகைப்பட உதவி @IPL