நடப்பு ஐபிஎல்லில் 'பெஸ்ட் பவுலிங்' டீமுக்கு எதிராக... சதங்களை விளாசிய வீரர்கள்!
Home > News Shots > தமிழ்By Manjula | May 13, 2018 08:45 PM
எவ்வளவு ரன்கள் குறைவாக அடித்தாலும் தங்களது பவுலிங் திறமையால் எதிரணியை வீழ்த்தும் அணி, என புகழப்பட்ட ஹைதராபாத் மீண்டும் ஒருமுறை சென்னையிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.
குறிப்பாக இன்றைய ஆட்டத்தில் 13 ஓவர்கள் வரை சென்னை அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல், ஹைதராபாத் அணி தவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிறந்த பவுலிங் அணி என புகழப்படும் ஹைதராபாத்துக்கு எதிராக, இந்த ஐபிஎல் போட்டிகளின் 3 சதங்களும் அடிக்கப்பட்டுள்ளன என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட சதங்கள்:-
ஏப்ரல் 19-ம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் வீரர் கிறிஸ் கெயில் 63 பந்துகளில் சதமடித்தார். அந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
மே 10-ம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வீரர் ரிஷப் பண்ட் 63 பந்துகளில் 128 ரன்கள் அடித்து நொறுக்கினார். இந்த போட்டியில் ஹைதராபாத் வென்றது.
மே 13-ம் தேதி(இன்று) ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் அம்பாதி ராயுடு 62 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் ஹைதராபாத் அணியை 2-வது முறையாக வீழ்த்தி சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இதேபோல ஏப்ரல் 20-ம் தேதி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
நடப்பு ஐபிஎல்லில் சதமடித்தும் தோல்வியைத் தழுவிய அணியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி திகழ்கிறது.