'2019 ஐ.பி.எல்' போட்டியில இது மட்டும் கிடையாது...ஏன் இந்த திடீர் முடிவு?...அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Feb 23, 2019 11:26 AM
கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படுவது ஐபிஎல்.இதன் தொடக்க விழாவே மிக பிரம்மாண்டமாக இருக்கும்.இதனிடையே இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐயின் நிர்வாகக்குழுத் தலைவர் வினோத் ராய் அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த போட்டிக்கான அட்டவணை பட்டியலும் வெளியிடப்பட்டது.ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில்,நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பிசிசிஐயின் ஆலோசனைக் கூட்டத்தில் ஐபிஎல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகக்குழுத் தலைவர் வினோத் ராய் ''வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐபிஎல் டி-20 தொடருக்கான தொடக்க விழா நடைபெறாது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அதற்காக செலவு செய்யப்படும் பணம், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக வழங்கப்படும்.இது ஐபிஎல் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமாக தான் இருக்கும்.ஆனால் நாம் நமது வீரர்களோடு நிற்கவேண்டிய நேரமிது.எனவே ரசிகர்கள் இந்த முடிவினை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்'' என வினோத் ராய் தெரிவித்தார்.