டிசம்பர் 18-ம் தேதி ஐபிஎல் ஏலம்.. யார்? யாரு? எந்த டீமுக்கு போகப்போறாங்க தெர்லயே!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 05, 2018 10:57 AM
IPL auction being scheduled to take place 18th of December in Jaipur

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் வரும் 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்க இருக்கிறது.

 

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பெரும் ஆதரவை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது.இதில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

 

இந்நிலையில் 2019-ம் வருடத்துக்கான ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் வரும்  18ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கின்றனர்.ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால்,முதலில் அதனை விடுமுறை நாட்களில் வைத்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் அது தற்போது மாற்றப்பட்டு ஏலம் நடைபெற இருக்கிறது.

 

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் டிகாக் விடுவிக்கப்பட்டு, அவர் மும்பை இண்டியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இருந்த அகிலா தனஞ்செயா, முஸ்தபிஷூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, யுவராஜ் சிங் உட்பட 11 வீரர்களை விடுவித்துள்ளது. அதனால் அந்த புதிய வீரர்களை அதிகமாக இந்த ஏலத்தில் எடுக்கலாம்.

 

டெல்லி அணி, கவுதம் காம்பீர் உட்பட சில வீரர்களை விடுவித்துவிட்டது. சன் ரைசர் ஐதராபாத் அணியில் இருந்த ஷிகர் தவான், டெல்லி அணிக்கு மாறியுள்ளார். அந்த அணி விருத்திமான் சாஹா, பிராத்வொயிட் ஆகியோரை விடுவித்துள்ளது. இதே போல மற்ற அணிகளும் சில வீரர்களை விடுவித்தும் புதிய வீரர்களை எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

 

இந்நிலையில் ஐபிஎல் நடக்க இருக்கும் நேரத்தில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால், போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா இல்லை வெளிநாடுகளில் நடைபெறுமா என்பது குறித்து,இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

 

மேலும் ஐபிஎல் முடித்த முடிந்த உடன், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  நடக்க இருப்பதால், வீரர்களுக்கு இது பயிற்சி ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #IPL #CRICKET #YUVRAJSINGH #BCCI #IPL2019