'உஷ் எனது மனைவியிடம் சொல்லி விடாதீர்கள்'... தனது முதல் காதலைப் பகிர்ந்த தோனி!
Home > News Shots > தமிழ்By Manjula | May 09, 2018 10:55 PM
நடப்பு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து வருகிறார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி தனது முதல் காதல் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர், உங்கள் மனம் கவர்ந்த முதல் பெண் யார்? என்ற கேள்வியை முன்வைத்தார். முதலில் சற்று தயங்கிய தோனியை மேலும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அவரின் மனம் கவர்ந்த பெண் குறித்த தகவலை தானே கண்டறிவதாகவும் குறிப்பிட்டு சில கேள்விகளை மட்டும் தோனியிடம் கேட்டார். அதன் மூலம் அந்த பெண் யார் என்பதை அவரே கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த தோனி "அவரின் பெயரில் A இருக்கும். A அவரது பெயரில் மூன்றாவதாக இடம் பெற்றிருக்கும். ஆமாம் அவரது பெயர் ஸ்வாதி.எனது மனைவியிடம் இதை பற்றி சொல்லி விடாதீர்கள். கடைசியாக 1999 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படிக்கும் போது ஸ்வாதியைப் பார்த்தது,'' என தனது முதல் காதல் குறித்த விவரங்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'தோற்கத் தகுதியானவர்கள் தான் நாங்கள்'.. விரக்தியின் உச்சத்தில் விராட் கோலி!
- IPL 2018: RCB loses the nail-biting match against SRH
- Williamson-led SRH sets target, can RCB win the match?
- 'அஸ்வின்' இன்னொரு தோனியா? பிரபல கிரிக்கெட் வீரர் விளக்கம்!
- 'சில ஆண்டுகளுக்குப்பின் அவரின் சிறந்த பேட்டிங்கை பார்க்கிறேன்' தோனியைப் புகழ்ந்த பிரபலம்!