வெரட்டி வெரட்டி ரன் அடிச்ச 'கொல்கத்தாவை'... வெளுத்து எடுத்த சென்னை 'சிங்கங்கள்'
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 11, 2018 12:08 AM
புகைப்பட உதவி @IPL
சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான 5-வது ஐபிஎல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 202 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து 2-வதாக பேட் செய்த சென்னை அணிக்கு வாட்சன் (42), அம்பாதி ராயுடு (39) இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
வாட்சன், ராயுடு ஆட்டமிழந்த பின் சென்னை அணி தள்ளாட ஆரம்பித்தது. மேலும் தோனி, ரெய்னா என முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தளராமல் இலக்கை விரட்டிய சென்னை அணி, 19.5 ஓவர்களில் 205 ரன்களைக் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சென்னை அணியின் ஜடேஜா ஒரு 'சூப்பர்' சிக்ஸ் அடித்து அணியை 'திரில்' வெற்றி பெறச்செய்தார்.
சென்னை அணி சார்பில் வாட்சன் 2 விக்கெட்டுகளும், ஹர்பஜன், ஜடேஜா, தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'சென்னை-கொல்கத்தா' மேட்சில் 'வர்ணனை' செய்ய மாட்டேன்:ஆர்.ஜே.பாலாஜி
- 3,30,000 litres of water used per day for an IPL match, say reports
- Eduda vandiya; Poduda whistle: Imran Tahir
- 'நீங்கள் இப்படி செய்யக்கூடாது'.. கேப்டன் தோனிக்கு சென்னை அணி நிர்வாகம் கட்டுப்பாடு!
- Protest effect: Players’ arrival delayed