வாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த, இந்தியா வந்துள்ள அதன் CEOவிடம் கோரிக்கை!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 21, 2018 06:15 PM
வாட்ஸப்பில் பொதுவாக முக்கியமான தகவல்களும் செய்திகளும் வருவதுண்டு. அதேசமயம் பலர் தன்னார்வம் காரணமாக சில சிக்கல்களை உருவாக்குவதற்கென திட்டமிட்டே தவறான தகவல்களை பகிர்கின்றனர். வதந்திகளை பரப்பவும் செய்கின்றனர்.
ஈழ விடுதலை போர் பற்றி ஐக்கிய நாட்டு சபையில் பேசுவதற்கான வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கிறது, அதற்கு இன்றே கடைசி நாள் என்கிற whatsapp மெசேஜ் பல வருடத்திற்கும் மேலாக நமக்கு வந்து கொண்டே இருக்கிறது. இந்த மெசேஜை நீங்கள் 50 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு குறிப்பிட்ட தொகை உங்கள் மொபைலுக்கு பேலன்ஸாக வந்து சேரும் என்பன போன்ற மெசேஜ்களையும் கட்டுப்படுத்துவதற்கான முறையான வழி முறைகள் இன்னும் உண்டாகவில்லை.
இந்நிலையில் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் சங்கர் பிரசாத் சமீபத்தில் இந்தியா வந்துள்ள வாட்ஸ் ஆப் முதன்மை செயலாளர் கிறிஸ் டேனியலை சந்தித்து இது பற்றிய முழு தகவல்களையும் புகார்களையும் அளித்திருக்கிறார். அதோடு தேவையற்ற வதந்திகளை பரப்ப கூடிய தவறான, பாலியல் சிக்கல்கள் உண்டாகக்கூடிய, மெசேஜ்கள் வாட்ஸ்ஆப்பில் வலம் வருவதை சுட்டிக்காட்டினார்.
இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு வாட்ஸ் ஆப் டிஜிட்டல் ரீதியான ஒரு தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து இந்தியாவில் நான்கைந்து நாட்கள் தங்க உள்ள வாட்ஸ் ஆப்பின் முதன்மை செயலாளர், இந்திய அரசுடன் சில முக்கியமான கருத்தரங்குகளில் பங்கேற்கவும் வாட்ஸ் அப்பில் பரவி வரும் தேவையற்ற மெசேஜ்களை கட்டுப்படுத்துவது பற்றியும் முக்கிய தீர்வினை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.