'இங்கிலாந்து டெஸ்ட்டுல' இந்த நக்கல் இல்லையே ப்ரோ.. வறுத்தெடுத்த பிரபலம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 09, 2018 02:47 PM
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரேயொரு கேள்வி இருக்கிறது. இந்த அணி ரஞ்சி கோப்பை காலிறுதி சுற்றுக்காவது தகுதி பெறுமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்களிடம் இருந்து இப்படியொரு ட்வீட்டை எதிர்பார்க்கவில்லை என, அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டீனோ பெஸ்ட்,'' இங்கிலாந்து சென்று இந்திய அணி விளையாடிய போது உங்களிடமிருந்து இதுபோன்ற ட்வீட்டுகள் வரவில்லையே. எப்படி இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர்கள் அவர்கள் தோல்விகளில் இருந்து விரைவில் கற்றுக்கொள்வார்கள்,'' என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
Hey bro didn’t see these cocky tweets vs England 🤷🏾♂️ .... but anyhow the young men will learn 🙏🏾
— Tino95 (@tinobest) October 6, 2018