‘பாபநாசம்’ பட பாணியில் இளம் பெண்ணை...'கொலை செய்துவிட்டு நாடகம்'...சிக்கிய பாஜக பிரமுகர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 14, 2019 01:28 PM

பாபநாசம் பட பாணியில் இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Indore twinkle dagre murder On the lines of drishyam movie

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் கரோடியா.மத்தியபிரதேச பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவருக்கும்,அதே பகுதியை சேர்ந்த டிவிங்கிள் டாக்ரே என்ற 20 வயது  பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.முதலில் நண்பர்களாக பழகிய இருவரும்,நாளடைவில் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.இதனால் அந்தப் பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஜெகதீஸை வற்புறுத்தினார்.ஆனால் ஏற்கனவே திருமணமான ஜெகதீஷ் அதனை மறுத்து வந்தார்.

இந்நிலையில் ஜெகதீஷ் கரோடியா விவகாரம் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.இதனையடுத்து கடும் கோபமடைந்த  ஜெகதீஷ் குடும்பத்தினர்,அந்த பெண்ணின் மீது கடும் கோபத்தில் இருந்தார்கள்.ஒருபுறம் டிவிங்கிள் தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி தொடர்ந்து வற்புறுத்திக்கொண்ட இருந்தார்.இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், தனது மகன்களுடன் சேர்ந்து திட்டம் ஒன்றைத் தீட்டினார். அதன்படி, 2016ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி டிவிங்கிளை அழைத்து 'உனக்கு ஒரு இடம் வாங்கி தருகிறேன்' என அவரை தனியாக அழைத்து சென்றார்.

அதனை உண்மை என்று நம்பிய டிம்பிள்,ஜெகதீஷ் மற்றும் அவரது மகன்களுடன் காரில் சென்றார்.ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், ஏதோ ஒரு நிலத்தைக் காண்பித்து விட்டு,சற்றும் எதிர்பாராத நிலையில் டிவிங்கிளின் கழுத்தை நெரித்துக் கொன்றனர்.உடனே வேறொரு இடத்திற்கு அவரது உடலை கொண்டு சென்று,அங்கு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.பின்பு எரிந்த உடலை புதைத்துவிட்டு யாருக்கும் சந்தேகம் வராதது போல வந்து விட்டார்கள்.

இந்நிலையில் டிவிங்கிளின் பெற்றோர், மகளை காணவில்லை என்று புகார் கொடுத்தனர். ஏற்கனவே தனது காதலை எதிர்த்த பெற்றோர் மீது டிவிங்கிள் புகார் தெரிவித்திருந்ததால், போலீசாருக்கு டிவிங்கிளின் பெற்றோர் மீது சந்தேக பார்வை திரும்பியது.மேலும் டிவிங்கிளுடன் நெருங்கி பழகிய ஜெகதீஷ் கரோடியா உட்பட பல பேரிடம் விசாரணை மேற்கொண்டார்கள்.

இதனிடையே ஜெகதீஷ், போலீசாரை திசை திருப்ப நினைத்து, ஓர் இடத்தில் யாரையோ கொன்று புதைத்திருப்பதாகச் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சென்று அந்தப் பகுதியை தோண்டி பார்த்தபோது,அங்கு நாய் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது.இதையடுத்து போலீசார் குழப்பமடைந்தனர்.மேலும்  டிம்பிள் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால்,வழக்கானது தேக்க நிலையில் இருந்தது.சம்பவம் நடந்து 2 வருடங்களாகிவிட்டது.

இருப்பினும் சோர்வடையாத காவல்துறையினர்,உண்மையை கண்டறியும் நவீன சோதனையின் படி விசாரணை நடத்த முடிவு செய்தனர்.அதன்படி டிவிங்கிளின் பெற்றோரிடமும், ஜெகதீஷிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.டிவிங்கிள் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் கண்டுபிடித்து தோண்டினர். பிரேஸ்லெட் மற்றும் சில ஆபரணங்கள் அங்கு கைப்பற்றப் பட்டன.அதனை வைத்து கொலைசெய்யப்பட்டது டிவிங்கிள் தான் என காவல்துறையினர் உறுதி செய்தனர்.

இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு குறித்த விவரங்களை செய்தியாளர்களுக்கு தெரிவித்த டிஜிபி மிஸ்ரா '' ஜெகதீஷும் அவர் மகன்களும் கொலைக்கு முன், அஜய்தேவ்கன் நடித்த ’த்ரிஷயம்’ படத்தைப் பார்த்துள்ளனர். (இந்தப் படம் தமிழில் கமல் நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது). அந்தப் படத்தின் கதைப்படி வழக்கை திசை திருப்ப முயன்றுள்ளனர்.ஆனால் உண்மை கண்டறியும் சோதனை மூலம்  குற்றவாளிகள் இவர்கள் தான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.இப்போது ஜெகதீஷ், அஜய், விஜய், வினய், நீலேஷ் காஷ்யப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Tags : #MURDER #KILLED #TWINKLE DAGRE MURDER