"கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன்"...ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் பிரபலம்!
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 22, 2018 06:58 AM
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பந்து வீச்சாளர் பிரவீன் குமார், அனைத்து விதமான போட்டியிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இவர் சமீப காலமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய ஓய்வு குறித்த தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.32 வயதாகும் பிரவீன் தனது முதல் போட்டியை 2005 நவம்பர் 23-ம்தேதி ஹரியானாவுக்கு எதிராக தொடங்கினார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர்தான் அவருக்கு சொந்த ஊர்.
இந்திய அணியில் இடம்பெற்ற பின்னர் 2007 நவம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார்.வலது கை வேகப்பந்து வீச்சாளரான பிரவீன் குமார் பல போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை வென்றிருக்கிறார். இந்தியாவுக்காக அவர் 6 டெஸ்ட், 68 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரவீன் குமார் "கனத்த இதயத்துடன் என் வாழ்க்கையின் முதல் காதலான கிரிக்கெட்டிற்கு விடைகொடுக்கிறேன்.எனது கனவை நனவாக்கிய இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும்,எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும் என உருக்கமான பதிவிட்டுள்ளார்.