பனிக்குடம் உடைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்.. கப்பற்படையின் மெய்சிலிர்க்கும் காட்சிகள் !
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 17, 2018 02:37 PM
கேரளாவில் ஏற்பட்டுள்ள கடுமையான மழை மற்றும் வெள்ளம் கேரள மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது.இது கேரள வரலாற்றில் மிகப்பெரிய பேரிடராக கருதப்படுகிறது.
இதுவரை மழைவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 167 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்கள் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவின் பல பகுதிகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் பல மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் பல பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள்.போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் வீடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் கர்பிணிபெண் ஒருவர் வெளியே செல்லமுடியாமல் மிகவும் அவதிப்பட்டார்.பனிக்குடம் உடைந்த நிலையில் அவர் மிகவும் அவதிப்பட்டு கொண்டிருந்தார்.தகவல் அறிந்து அங்கு வந்த கப்பற்படை வீர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.அச்சம்பவம் மிகவும் மெய்சிலிர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
அதன் வீடியோ காட்சிகளை கப்பற்படை தற்போது வெளியிட்டுள்ளது.
A pregnant lady with water bag leaking has been airlifted and evacuated to Sanjivani. Doctor was lowered to assess the lady. Operation successful #OpMadad #KeralaFloodRelief #KeralaFloods2018 pic.twitter.com/bycGXEBV8q
— SpokespersonNavy (@indiannavy) August 17, 2018