'உயிரைக் கொடுத்து மீட்டது மட்டுமல்ல'...உதவித்தொகையாக 9 கோடியையும் வழங்கிய வீர்கள்!
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 31, 2018 12:08 PM
கேரளாவிற்கு தங்களின் ஒருநாள் சம்பளத்தை வழங்கி அனைவரையும் நெகிழவைத்துள்ளார்கள் நமது கடற்படை வீர்கள்.
கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை அந்த மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது. 300-கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம்,நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி உயிர் இழந்தார்கள்.2000 கோடிக்கும் மேல் கடும் இழப்பை சந்தித்து இருக்கிறது கடவுளின் தேசம்.
இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான கேரளாவிற்கு இது மிக பெரிய இழப்பாகும்.சுற்றுலா தொழிலை நம்பி பல குடும்பங்கள் தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.இந்நிலையில் இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் இடியாக விழுந்துள்ளது.இந்த சூழ்நிலையிலிருந்து அவர்கள் மீண்டுவர பல்வேறு தரப்பினரும் பல உதவிகளை செய்து வருகின்றார்கள்.
பல்வேறு மாநில அரசுகள்,அரசு ஊழியர்கள்,பல்வேறு நிறுவனங்கள் என பலரும் தங்களின் ஒருமாத ஊதியத்தை கேரளாவிற்கு வழங்கி வருகிறார்கள்.இந்நிலையில் இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பாக அவர்களின் ஒரு நாள் சம்பளமாக 8.9 கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அட்மிரல் சுனில் லான்பா வழங்கினார்.
மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு நிற்காமல் கேரள மக்களுக்கு தங்களின் ஒருநாள் சம்பளத்தை வழங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்கள் நமது கடற்படை வீரர்கள்.