இந்திய மீனவர்கள் 26 பேரின் கதி என்ன?..பாகிஸ்தானின் முடிவு!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 13, 2018 06:30 PM
நடந்து முடிந்திருந்த பாகிஸ்தானின் அதிபர் தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்றிருந்ததை அடுத்து பாகிஸ்தானின் அதிபராக இம்ரான்கான் பதவி ஏற்கிறார். இதன் காரணமாக, பாகிஸ்தான் கடற்படையினரால் கராச்சிக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
விடுவிக்கப்படும் மீனவர்கள் இந்தியாவுக்கு வரும் பொறுப்புச் செலவை, எதி பவுண்டேஷன் ஏற்றுக்கொள்கிறது. முன்னதாக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற உடனேயே பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 26 பேரையும் விடுதலை செய்வதாக இம்ரான்கான் அறிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதமர் மாளிகையில் நடக்கும் பதவி ஏற்பு விழாவை அடுத்து அங்கிருக்கும் மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற இம்ரான்கானின் திட்டத்தை செயல்படுத்த பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்நாட்டின் சுதந்திர தினமான நாளை, விடுதலையான மீனவர்கள் வாகா எல்லையில் வழியாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.