இந்திய தம்பதியை இறக்கிவிட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்...இனப்பாகுபாடு காட்டியதாக புகார் !
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 10, 2018 10:56 AM
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்யவிருந்த இந்திய தம்பதியரின் குழந்தை அழுததால் அவர்களை விமான ஊழியர்கள் இறக்கிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் இருந்து பெர்னில் நகருக்கு கடந்த ஜூலை 23-ம் தேதியில், பிரிட்டிஷ் ஏர்வேஸின் BA 8495 விமானம் புறப்பட்டது. இதில் மத்திய அரசில் முத்த அதிகாரியாக பணிபுரியும் பாதக் தனது குடும்பதினருடன் பயணித்துள்ளார்.
விமானம் புறப்பட தயாராக இருந்த நேரத்தில், தம்பதியரின் மூன்று வயதுக் குழந்தை சௌகரியமாக அமர முடியாமல் அழத்தொடங்கியது. அதனால் குழந்தையை கையில் எடுத்து அவரது தாய் சமாதானப்படுத்த தொடங்கினார். இருந்தபோதும் குழந்தை அழுகையை நிறுத்தாமல் அழுதுகொண்டே இருந்தது. இதனால் கோபமடைந்த அருகில் இருந்த பயணி அவர்களை கண்டித்தார்.
இதனை தொடர்ந்து விமானம் ஓடுபாதையில் ஓட துவங்கிய நிலையில் குழந்தை மீண்டும் அழத்தொடங்கியது.இதனால் மீண்டும் கோபம் அடைந்த அந்த பயணி விமான ஊழியர்களிடம் புகார் அளித்தார்.ஊழியர்கள் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்கள்.அவர்கள் விமானத்தை டெர்மினலுக்கு திருப்பும்படி உத்தரவிட்டார்கள்.
இதனை தொடர்ந்து இந்திய குடும்பத்தினரை விமான ஊழியர்கள் வலுக்கட்டாயமாக இறக்கி விட்டார்கள். இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளான அவர்கள் இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில்,விமான ஊழியர்கள் தங்களிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், இனவெறியை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் செயல் இருந்ததாகவும் அவர்கள் தங்களின் புகார் மனுவில் தெரிவித்து உள்ளார்கள். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.