தனி ஒருவராக கேரளாக்கு 50 கோடி வழங்கிய வெளிநாடுவாழ் இந்திய தொழில் அதிபர் !
Home > News Shots > தமிழ்By Jeno | Aug 21, 2018 01:33 PM
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக மழை கொட்டித்தீர்த்தது. 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உருக்குலைந்துள்ள கேரளாவுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 50 கோடி கொடுத்து கேரளாவிற்கு தனிநபராக பெரும் பங்காற்றி உள்ளார் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர். கேரள நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் தனி பங்களிப்பு இவருடையதுதான்.
வி.பி.எஸ் ஹெல்த் கேர் என்னும் பெரு நிறுவனத்தின் தலைவர் ஷம்சீர் வயாலில்.கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட இவர், அபுதாபியில் தனது நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் கேரள மழை மற்றும் வெள்ள பாதிப்பை கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இதனால் தான் பிறந்த மண்ணிற்கு நிவாரண நிதியாக ரூபாய் 50 கோடி கொடுத்துள்ளார். நிவாரண நிதி கொடுத்தது மட்டுமன்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்கத் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
தனி ஒரு நபராக தான் பிறந்த மண்ணிற்கு நிவாரணமாக 50 கோடி வழங்கியதோடு மக்களின் மறு வாழ்விற்காக பல திட்டங்களை மேற்கொண்டு செல்ல இருக்கும் ஷம்சீர் நிச்சயமாக தனிஒருவன் தான் !