‘தூக்கி அடித்த பேட்ஸ்மேன், சுருண்டு விழுந்த இந்திய பௌலர்’.. பயிற்சி ஆட்டத்தில் நடந்த பரபரப்பு!
Home > News Shots > தமிழ்By Selvakumar | Feb 11, 2019 06:56 PM
பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளார் அசோக் டிண்டாவின் முகத்தில் பேட்ஸ்மேன் அடித்த பந்து பலமாக தாக்கியதால் காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து விச்சாளரான அசோக் டிண்டா 13 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது மாநில அணிகள் மோதும் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் வரும் 16 -ம் தேதி சையது முஸ்டாக் அலி டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்காக ஈடென் கார்டன் மைதானத்தில் அசோக் டிண்டா தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அசோக் டிண்டா வீசிய பந்தை பேட்ஸ்மேன் விவேக் சிங் தூக்கி அடித்தார். இதில் வேகமாக வந்த பந்து அசோக் டிண்டாவின் முகத்தில் தாக்கியது.
இதனால் நிலைகுலைந்து மைதானத்தில் விழுந்த அசோக் டிண்டாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அசோக் டிண்டா நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
— Abhishek kumar (@stepwithabhi) February 11, 2019