‘அது கள ஆக்ரோஷம் இல்ல.. கோலியின் போராட்ட குணம்’.. பந்து வீச்சாளர் வேகம்!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 24, 2018 10:54 PM
விராட் கோலியின் ‘கள ஆக்ரோஷத்தை’ ரசிப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறியிருக்கிறார். ‘அதுதான் கோலியின் வெற்றிக்கு காரணமாகவும் இருக்கிறது. அவரை விமர்சிப்பவர்கள் அவரது போராட்ட குணத்தையும் பேச வேண்டும்’ என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கூறியுள்ளார்.
முன்னதாக இரண்டாவது டெஸ்ட்டின்போது கோலி - டிம் பெய்ன் இருவருக்குமிடையேயான வாக்குவாதத்தால் விமர்சனங்கள் எழுந்ததோடு, கோலியின் ஸ்லெட்ஜிங் பாராட்டுகளையும் பெற்றது. தொடர்ந்து பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா, கோலி நடந்துகொள்வது மோசமாக இருந்ததாகவும் விமர்சித்தார். ஆனால் டிம் பெய்ன், கோலிக்கும் தனக்கும் இடையேயான சண்டை, தனிமனித தாக்குதலாக மாறிவிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியிருந்தார்.
Tags : #VIRATKOHLI #VIRAL #TWEET