4 முறை சதம் அடித்தும் கோலியின் சாதனைகளைத் தொட்டும் ரோகித் ஒரே நாளில் இரட்டை சாதனை!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Nov 07, 2018 11:05 AM
லக்னோவில் எக்னா மைதானத்தில் நடந்த இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்ய, இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் ஆடினர்.
இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 195 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 61 பந்துகளில் 111 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதில் பவுண்டரிகளும் சிக்சருமாக ரோகித் சர்மா அடித்ததை அடுத்து 13.6 ஓவர்களில் 123 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது, ஷிகர் தவான் 43 ரன்களில் (41 பந்துகள்) அவுட் ஆகினார். எனினும் ரோகித் சர்மா, அசராமல் விளையாண்டு சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 4 முறை சதம் அடித்த வீரர் என்கிற புகழை அடைந்துள்ளார். மேலும் முன்னதாக 62 போட்டிகளில் 2,102 ரன்களை எடுத்து 48.88 சராசரி ரன் ரேட் பெற்ற கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். டெஸ்ட் மேட்ச்களில் கவனம் செலுத்தும் கோஹ்லி சில டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வெடுக்கும் நிலையில் ரோகித் ஷர்மாவின் இந்த சாதனை குறிப்பிடத் தகுந்ததாக கவனம் பெறுகிறது.