'மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்'..குறைக்கப்பட்ட ஓவர்கள்:174 ரன்கள் வெற்றி இலக்கு!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 21, 2018 04:24 PM
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், இந்திய அணிக்கு டக்வொர்த் லூவிஸ் முறையில் 17 ஓவர்களில் 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பைன் நகரில் நடக்கும் முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இடையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து இந்திய அணிக்கு டக்வொர்த் லூவிஸ் முறையில் 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Rain has stopped play in Brisbane! 🌧️
— ICC (@ICC) November 21, 2018
Australia are 153/3 after 16.1 overs with Glenn Maxwell on 46 and Marcus Stoinis on 31.#AUSvIND 1st T20I live 👇https://t.co/TpS5WMHWvf pic.twitter.com/dKN2kTltbw