ஆப்கான் பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஷிகர் தவான்
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 14, 2018 11:01 AM
முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து ஆப்கானிஸ்தான் அணிக்குக் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் சின்னச்சாமி அரங்கில் இந்தியா-ஆப்கான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனைத் தொடந்து முரளி விஜய், ஷிகர் தவான் இருவரும் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்கியுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பு எதுவுமின்றி 80 ரன்களை எடுத்துள்ளது.
ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான்(51) அரை சதம் கடந்தார். டெஸ்ட் போட்டியில் இது தவானின் 6-வது அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: எம்.விஜய், தவான், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே (கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.
ஆப்கானிஸ்தான்: முகமது ஷாசாத், ஜாவித் அகமதி, ரமத் ஷா, அஸ்கார் ஸ்டானிக்ஜாய் (கேப்டன்), நசிர் ஜமால் அல்லது ஹஷ்மத்துல்லா சாஹிதி, முகமது நபி, அப்சர் ஜஜாய், ரஷித்கான், அமிர் ஹம்சா அல்லது ஜாகிர் கான், யாமின் அகமத்ஜாய், முஜீப் ரகுமான் அல்லது வபதார்.