
நேற்று நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக, ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்க அணி 42.1 ஓவர்கள் முடிவில் 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சதமடித்த இந்திய வீரர் (115 ரன்கள்) ரோஹித் சர்மா ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி, நம்பர் 1 இடத்தைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 14, 2018 10:37 AM #VIRATKOHLI #INDVSSA #விராட்கோலி #இந்தியா #தென்ஆப்பிரிக்கா #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories