ஆசிய விளையாட்டில் 68 பதக்கங்கள் பெற்று 8 வது இடத்தில் இந்தியா.. முதல் இரண்டு இடங்கள்?
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Sep 01, 2018 04:23 PM
ஆசியவிளையாட்டு2018; செப்.01:
8 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. இந்த விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வாங்கிய பட்டியலில் இந்தியா தொடர்ந்து 8 ஆவது இடத்தில் நீடித்து வருகிறது.
இன்று மதியும் 3.40 மணிவரையிலான நிலவரப்படி, 15 தங்கப் பதக்கங்கள், 24 வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களை பெற்று இந்தியா இருக்க, இதே இப்பட்டியலில், மொத்தம் 270 பதக்கங்களுடன் சீனாவும், 193 பதக்கங்களுடன் ஜப்பானும் முதல் இரண்டு இடங்களைத் தொடர்ந்து பிடித்துள்ளன.
ஆசிய விளையாட்டு போட்டிகளில், 2010க்கு பிறகு இந்தியா பெறும் அதிக பதக்கங்கள் இவை என்பதும், 1951க்கு பிறகு அதிக தங்கமும், 1982க்கு பிறகு அதிக வெள்ளியும் பெற்று, முதல் முறையாக மொத்தம் (இதுவரை) 68 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Tags : #INDIA #ASIANGAMES #ASIANGAMES2018