உலகக் கோப்பை மகளிர் டி20 :"அறிமுக போட்டியிலேயே அசத்திய நம்ம சென்னை பொண்ணு"!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 10, 2018 10:18 AM
India beat New Zealand by 34 run in ICC Women\'s World T20

உலகக் கோப்பை மகளிர் டி20  கிரிக்கெட் தொடரானது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது.இதில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில்,தனது அபாரமான பௌலிங் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார்,தமிழகத்தை சேர்ந்த தயாளன் ஹேமலதா.

 

சர்வதேச டி20 தரவரிசையில் 5 வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தனது முதல் போட்டியில் 2வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தைச் சந்தித்தது.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் தனியா பாட்டியா மற்றும் ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் களம் இறங்கினார்கள்.

 

நியூசிலாந்தின் அபாரமான பந்து வீச்சிற்கு இந்த ஜோடியால் தாக்கு பிடிக்க முடியவில்லை.இதனால் சற்று தடுமாறிய இந்திய அணி,கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் மிக வேகமாக உயர்ந்தது.9 பந்துகளில் சதமடித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.

 

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்குத் தொடக்க வீரர் பேட்ஸ் ஆறுதல் அளித்தார்.அதேநேரம் மற்ற வீரர்கள் சொதப்பினர்.இந்திய பௌலர்களின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் பீல்டீங்கினால் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது.இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து தோல்வியை தழுவியது.

 

இந்திய அணி தரப்பில் தமிழகத்தைச் சேர்ந்த தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இவர் சென்னையை சேர்ந்தவர்.ஆல் - ரவுண்டரான ஹேமலதா,எம்.ஓ.பி வைஷ்ணவ கல்லூரியில் படித்து வருகிறார்.தான் அறிமுகமான முதல் டி20 போட்டியிலேயே பேட்டிங், பௌலிங்கிலும் அசத்தியுள்ளார்.

 

7 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 15 ரன்கள் குவித்த அவர், 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். தொடக்க ஆட்டக்காரர் பீட்டர்சன், நியூசிலாந்து கேப்டன் ஏமி சட்டர்த்வெயிட் என முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.சிறப்பான ஆல் - ரவுண்டராக செயல்பட ஹேமலதாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Tags : #CRICKET #DAYALAN HEMALATHA