
'நண்பேண்டா'.. ஆப்கானிஸ்தான் வீரர்களை நெகிழ வைத்த இந்திய அணி!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 15, 2018 07:53 PM

புகைப்பட உதவி @BCCI
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 109 ரன்களுக்கு சுருண்டது.
ஆனால் 2-வது இன்னிங்சை விளையாட விரும்பாமல் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில், போட்டிக்குப்பின்னர் வெற்றிக்கோப்பையுடன் போஸ் கொடுக்க ஆப்கானிஸ்தான் வீரர்களை இந்திய அணியினர் அழைத்தனர். 2 அணியினரும் கோப்பையுடன் போஸ் கொடுத்த காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
What a brilliant gesture from #TeamIndia to ask @ACBofficials players to pose with them with the Trophy. This has been more than just another Test match #SpiritofCricket #TheHistoricFirst #INDvAFG @Paytm pic.twitter.com/TxyEGVBOU8
— BCCI (@BCCI) June 15, 2018


RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
