பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுக்கும், அவரது ஆன்மீக வழிகாட்டியான புஷ்ரா மனேகாவுக்கும் இடையே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் இம்ரான்கான் 3-வது திருமணத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.
கடந்த 1995-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டின் கோடீஸ்வரரின் மகள் ஜெமீமா கோல்ட்ஸ்மித்தை திருமணம் செய்து, 9 ஆண்டுகளுக்குப் பின் இம்ரான் அவரை விவாகரத்து செய்துவிட்டார். முதல் திருமணத்தின் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
பின்னர் பாகிஸ்தான் டிவி தொகுப்பாளினி ரேஹம் கானை, கடந்த 2015-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்தார். 10 மாதங்களிலேயே அந்தத் திருமணம் விவகாரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 19, 2018 10:26 AM #IMRANKHAN #MARRIAGE #இம்ரான்கான் #திருமணம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories