
பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 7-ம் தேதிதான் கோவை மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மீண்டும் நேற்று நள்ளிரவு மாவட்ட தலைவர் வீட்டில் காருக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நாங்கள் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது.
ரத யாத்திரை பிரச்சினை இல்லை. ரத யாத்திரை வரக்கூடாது என்று சொல்லி பிரச்சனை செய்கிறார்கள். இந்துக்கள் அத்தனை பேரும் சிந்தனை செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது. ஆராயாமல் எதற்கு எடுத்தாலும் பாஜகவைக் குறை கூறுகிறார்கள்.
23-ம் தேதி போராட்டத்தின்போது நாம் கூட்டிவரும் கூட்டம் அவர்களை அச்சுறுத்த வேண்டும். பயமுறுத்த வேண்டும். அவர்களுக்கு நம்மீது கைவைக்க துணிச்சல் வரக்கூடாது.
BY MANJULA | MAR 21, 2018 3:39 PM #TAMILISAISOUNDARARAJAN #BJP #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories