
மதுரை ஒத்தக்கடையில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிக்கொடியை ஏற்றி கட்சியின் பெயரை அறிவித்தார். கமல்ஹாசனின் கட்சிக்கு 'மக்கள் நீதி மய்யம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பின்னர் ரசிகர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார். அப்போது அவரிடம், நீங்கள் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் ஸ்கூட்டர் கொடுப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நடிகர் கமல், " நான் ஆட்சிக்கு வந்தால் ஸ்கூட்டரும், குவாட்டரும் கொடுக்க மாட்டேன். இலவசம் இருக்காது. நீங்கள் மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுப்பேன். வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்,'' என்றார்.
BY MANJULA | FEB 21, 2018 9:41 PM #KAMAL #MAKKALNEEDHIMAIAM #கமல் #மக்கள்நீதிமய்யம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories