'நானும் விளையாட முடியாமல் உட்கார வைக்கப்பட்டேன்':உண்மையை போட்டுடைத்த...பிரபல வீரர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 27, 2018 11:52 AM
I too was dropped at my peak,Ganguly says about Mithali Raj issue

உலகக்கோப்பை போட்டியில் மிதாலி ராஜ் அணியில் சேர்க்கப்படாதது போன்று,தனக்கும் நடந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி  தெரிவித்துள்ளார்.

 

பெண்களுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியானது மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றது.இதன் இறுதி போட்டியில்,இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.இதனிடையே,அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

 

இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் அதிரடி வீராங்கனை மிதாலி ராஜை அணியில் சேர்க்காதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி "நான் கேப்டனாக இருந்தபோது என்னையும் உட்கார வைத்தார்கள். இப்போது மிதாலி ராஜ் உட்கார வைக்கப்பட்டதைப் பார்த்த போது, ‘வெல்கம் டு தி கிளப்’ என்று கூறினேன்.

 

மேலும் நான் ஒருநாள் போட்டிகளில் உச்சத்தில் இருந்தபோது, நானும் 15 மாதங்கள் ஒருநாள் அணியில் சேர்க்கப்படாமல் உட்கார வைக்கப்பட்டேன். கிரிக்கெட்டில் இருக்கும் அனைவரது வாழ்க்கையிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும். ஆனால் திறமையானவர்களுக்கு கதவு தனாகவே திறக்கும்'' என மிதாலி ராஜிற்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை உதிர்த்தார் சவுரவ் கங்குலி .

Tags : #SOURAVGANGULY #BCCI #CRICKET #MITHALI RAJ