
மயிலாடுதுறையை சேர்ந்த செல்வம் என்பவர் கியர் வண்டி ஓட்ட தெரியாததால், டிவிஎஸ் எக்ஸ் எல் பைக்குகளை மட்டும் குறி வைத்து திருடியதாக பாலிமர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மயிலாடுதுறை பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டுப்போவதாக புகார்கள் வந்ததால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போலீசார் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த செல்வம் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
தனக்கு கியர் வண்டி ஓட்ட தெரியாததால் டிவிஎஸ் எக்ஸ் எல் பைக்குகளை மட்டும் திருடுவதாக தெரிவித்த செல்வத்திடமிருந்து, போலீசார் 21 டிவிஎஸ் எக்ஸ் எல் பைக்குகளை கைப்பற்றியுள்ளனர்.
BY SATHEESH | FEB 23, 2018 8:43 AM #TAMILNADU #TVS XL #THEFT #MAYILADUTHURAI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories