'நிர்மலா தேவி முகத்தைக்கூட பார்த்ததில்லை'... தமிழக ஆளுநர் விளக்கம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 17, 2018 07:31 PM
அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் செல்போனில் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை கிண்டி ராஜ்பவனில் செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ''மாணவிகளிடம் பேராசிரியை அவ்வாறு பேசியது கண்டனத்துக்குரியது. சட்டவிதிகளின்படியே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
மாநில அரசு, பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட முடியாது. ஒரு வாரத்தில் அவர் அறிக்கை அளிப்பார். அறிக்கை அளித்த பின்னர், அதன்மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
நிர்மலா தேவி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்குஇப்போது எந்த தேவையும் இல்லை. நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
நிர்மலா தேவி விவகாரத்தில் என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. 78 வயதாகும் எனக்கு கொள்ளுப்பேரன் இருக்கிறான். என்னைப்பற்றி தவறாக பேச வேண்டாம்,'' இவ்வாறு அவர் கூறினார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் வெப்பநிலை 'அதிகரிக்கும்'!
- ரூபாய் 15500 கோடி கடன்: 'திவால்' என அறிவிக்கக்கோரி 'ஏர்செல்' மனு
- சிக்னலில் சிக்கல்: மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு 'ஏர்செல்' அறிவுறுத்தல்
- 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்'... இரும்பு மனுஷி 'ஜெயலலிதா'வின் 70வது பிறந்ததினம் இன்று!
- 'நள்ளிரவுக்குள் நிலைமை சீர் செய்யப்படும்'... ஏர்செல் தலைமை அதிகாரி பேட்டி!