'ரன் எடுக்க' நான் ஏன் ஓடல தெரியுமா?.. தினேஷ் கார்த்திக் புதிய விளக்கம்!
Home > News Shots > தமிழ்By Jeno | Feb 14, 2019 03:48 PM
ஹாமில்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி 20 போட்டியின் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் ரன் எடுக்க ஓடாததது பெரும் சர்ச்சையை கிளப்பியது.வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரை இழந்தது.இது ரசிகர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.இதனால் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தினேஷ் கார்திக்கை கடுமையாக திட்டி தீர்த்தார்கள்.
குர்னால் பாண்டியா அதிரடியாக விளையாடி வந்த நிலையில்,தினேஷ் கார்த்திக் அவருக்கு ஸ்டிரைக் கொடுக்காமல் தோனி போன்று தானே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைக்க நினைத்ததே,இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள்.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள தினேஷ் கார்த்திக் ''என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பியதால் நான் ஒரு ரன் எடுக்க ஓடவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பவருக்கு நிச்சயம் அழுத்தம் என்பது அதிகமாக இருக்கும்.
அந்த அழுத்தத்தையும் தாண்டி பெரிய அளவிலான ஷாட்களை அடிக்க வேண்டியது பேட்ஸ்மேனின் கடமை.அதற்கு அவரது திறமை மீது முழு நம்பிக்கை வேண்டும்.அந்த நம்பிக்கையில் தான்,நான் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தேன்.ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது.கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பது உண்டு.அந்த நேரத்தில் நம்முடன் களத்தில் இருக்கும் வீரர் மீதும் முழுநம்பிக்கை இருக்க வேண்டும்.ஆனால் என்னால் எதிர்முனைக்கு ஓட முடியாமல் போய்விட்டது.
அந்த நிகழ்வு எனக்கு நல்ல பாடத்தை கற்று தந்திருக்கிறது.பயிற்சியின் மூலம் நிச்சயம் இதுபோன்ற சூழ்நிலைகளில் விளையாடி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.உங்கள் மீதிருக்கும் நம்பிக்கை நிச்சயம் ஆட்டத்தை வெற்றியில் முடிக்க உதவும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.