சபரிமலை விவகாரம்:செய்தியாளர்களின் கேள்விக்கு கமலின் அடடே பதில்!
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 16, 2018 11:18 AM
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்களும், 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே செல்லலாம் என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஐயப்பன் கோயிலிற்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சூசகமான பதிலை அளித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர் ‘இது ஐயப்ப பக்தர்களுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையிலான விவகாரம். இதை வெறுமனே பார்வையிட மட்டுமே செய்கிறேன். இந்த விவகாரம் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. ‘நோ கமென்ட்ஸ்’ என்று கூட நான் சொல்லப் போவதில்லை’ மேலும் நான் இதை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் என்று பதிலளித்தார்.
This is a matter between the Supreme Court and the devotees. I am just an onlooker. I am not going to comment on it. I am not even going to say 'no comments': Kamal Haasan, Makkal Needhi Maiam on #SabarimalaTemple pic.twitter.com/WyUabj9oPE
— ANI (@ANI) October 15, 2018