“சேப்பாக்கம் மைதானத்திற்குள் நல்ல பாம்புகள் விடப்படும்” பிரபல அரசியல்வாதி எச்சரிக்கை
Home > News Shots > தமிழ்By Satheesh | Apr 10, 2018 12:58 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடந்து வரும் வேளையில், இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதும் போட்டி நடைபெறக் கூடாது என அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நாகப்பாம்புகளை மைதானத்தில் விடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய வேல்முருகன், "தண்ணீர் பாட்டில், கைக்குட்டை, பேனா ஆகியவை மைதானத்திற்கு எடுத்து செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மலையில் இருக்கும் நல்லபாம்புகளை மைதானத்திற்குள் விடப் போகிறார்கள்.
அந்த பாம்புகளைப் பிடிக்க விளையாட்டு வீர்ர்களும், போலீசாரும் ஐபிஎல் விளையாட போகிறார்கள். நாங்கள் வேடிக்கை பார்க்க போகிறோம்”, என தெரிவித்தார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கிரிக்கெட் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல - பிரபல அரசியல்வாதி
- Velmurugan issues major warning ahead of IPL match in Chennai
- காவிரி போராட்டம் எதிரொலி: சுரேஷ் ரெய்னா கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சி ரத்து!
- Suresh Raina’s event in Tirunelveli cancelled
- "If any of the five forces of nature are disturbed, the world will come to an end": Rajinikanth