Looks like you've blocked notifications!
மனிதம் மரித்துப்போய் விட்டதா?.. பிரபல நடிகர் ஆதங்கம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள வெள்ளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி(45), தனது கடைசி மகன் தனயன் மற்றும் மகள் தனமுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார்.

 

அப்போது, திடீரென வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேரையும் ஆயுதங்களால் சராமாரியாகத் தாக்கினர். இதில் சிறுவன் தனயன் சம்பவ இடத்திலேயே இறக்க, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த சம்பவத்திற்கு நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அதில், " விழுப்புரம் சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா? நம் முற்றத்தை சீர்செய்யாத நாம் சிரியாவின் படுகொலைகளை எண்ணி உச்சுக்கொட்டி என்ன பயன்? மனிதம் மரித்ததெப்போது?," இவ்வாறு பிரசன்னா தெரிவித்துள்ளார்.

BY MANJULA | FEB 26, 2018 6:53 PM #PRASANNA #VILLUPURAM #பிரசன்னா #விழுப்புரம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People