தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், பந்தைச் சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பந்து சேதப்படுத்தப்பட்டதை கண்டுப்பிடித்த முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஃபானி டிவில்லியர்ஸ், அது எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அதில், "நான் போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்துடன் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகிறேன். ஆடுகளத்தில் புற்கள் அதிகம் இருப்பதால் ரிவர்ஸ்விங் மிகக் கடினம்.
ஆனால் 26, 27, 28 ஓவர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிக எளிதாக ரிவர்ஸ்விங் செய்தபோது, எனக்கு சந்தேகம் வந்ததால், எங்களது கேமரா நபர்களிடம் பந்தின் மீது கவனம் செலுத்துமாறு கூறினேன்.
சுமார் ஒன்றை மணி நேர அலசலுக்குப் பின்பு, ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் மறைத்து வைத்திருந்த உலோகத்தைக் கொண்டு பந்தை சேதப்படுத்தி, ரிவர்ஸ்விங் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது", என தெரிவித்துள்ளார்.
OTHER NEWS SHOTS