பாம்பின் புகலிடமான மைக்ரோ ஓவன்...சமைப்பதற்காக திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி !
Home > News Shots > தமிழ்By Jeno | Oct 05, 2018 11:10 AM
பாம்பை கண்டால் படையும் நடுக்கும் என்பது நம்ம ஊரின் பழமொழி.அதை மெய்ப்பிக்கும் வகையில் அதிர்ச்சியான ஒரு சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.
லண்டனில் நகரில் ஸ்டாக்போர்ட்டில் வசிக்கும் வயதான தம்பதியினர், சமைப்பதற்காக ஓவனை திறந்த போது அதிலிருந்த பாம்பை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். பின்னர் இதுகுறித்து, அங்கிருக்கும் உயிரின வதைதடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் வந்து பாம்பினை பிடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த உயிரின வதை தடுப்பு அதிகாரி " 82 வயதான அந்த பெண் சமைப்பதற்காக ஓவனை திறந்துள்ளார்.அப்போது பாம்பு போன்று ஒரு உருவம் நெளிவதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்.இருப்பினும் சமீபத்தில்தான் அவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதனால் கண்ணில் தான் ஏதோ பிரச்சனை என எண்ணிய அவர் தனது கணவரிடம் உடனே சென்று இதை தெரிவித்தார்.
அவரது கணவர் வந்து பார்த்ததும் ஓவனுக்குள்ளே 3 அடி நீளமுள்ள ஆப்பரிக்க பழுப்பு நிற பாம்பானது இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து எங்களுக்கு தகவல் தெரிவித்தார்கள் என உயிரின வதை தடுப்பு அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்த பாம்பிற்கு மீட்பு குழுவினர் சமி என்று பெயரிட்டுள்ளனர்.
🎥 An elderly couple from Stockport went to cook some chips and found this 3ft-long African brown snake in their oven. 😮
— Capital Manc News (@CapitalMANNews) October 2, 2018
'Sammy' is now being looked after by the @RSPCA_official 🐍 #CapitalReports
*They decided against oven chips and went to the fish&chip shop instead. 👍 pic.twitter.com/tpHhgakQAU