4 மாதத்தில் முறையாக தேர்தல் நடத்த வேண்டும்: இயக்குநர் பாரதிராஜா!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Dec 20, 2018 02:13 PM
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த சில முறைகேடுகள் காரணமாக, எதிர் தரப்பினரான இயக்குநர் இமயம் பாரதிராஜா, ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 10 பேரும் விஷால் மீது முதல்வரிடம் நேரில் சென்று, ‘தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இன்னும் 4 மாதத்தில் முறையாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ’ என்று முறையிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த பாரதிராஜா, ‘தற்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழுவில் வெளிப்படைத்தன்மை இல்லை’ என்று கூறியவர் இதற்கான தீர்வு முழுமையாக உருவாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் அதிகாரிகளோடு கலந்து பேசி முடிவெடுப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியதாக தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்த கைது நடவடிக்கைக்கும் அரசுக்கும் சம்மந்தம் இல்லை என்று பேட்டி அளித்துள்ளார்.
அதோடு, தயாரிப்பாளர் சங்கத்தின் பணம் ரூ.7.85 கோடி எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதை விஷால் விளக்க வேண்டும் என்று கே.ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக எதிர் தரப்பினரால் தடை உரிமம் பெறப்பட்டு தயாரிப்பாளர் சங்கத்துக்கு போடப்பட்ட பூட்டினை உடைக்க முயற்சித்ததால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கைது செய்யப்பட்டு தியாராகராய நகரில் உள்ள மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.