'நர்ஸ் மற்றும் பெண்கள் உடைமாற்றும் அறையில்...செல்போன் வைத்து ரகசிய வீடியோ'...சிக்கிய சூப்பர்வைஸர்!
Home > News Shots > தமிழ்By Jeno | Dec 29, 2018 04:03 PM
நர்ஸ்கள் மற்றும் பெண்கள் உடைமாற்றும் அறைகளில் செல்போனை வைத்து ரகசியமாக படம் எடுத்த துப்பரவுப் பணி சூப்பர்வைஸரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
சென்னை சைதாப்பேட்டையில் சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது.அங்கு துப்பரவுப் பணியாளர் ஒருவர், தன்னுடைய செல்போனில் பெண்களின் ஆபாச வீடியோக்களை,மருத்துவமனைக்குள் அமர்ந்து பார்த்து கொண்டிருந்திருக்கிறார்.அப்போது இதனை அங்கு மேலாளராக பணியாற்றும் ரேவதி என்பவர் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.இதனையடுத்து அந்தத் துப்பரவுப் பணியாளரிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்திருக்கிறார்.
மருத்துவமனையில் துப்பரவுப் பணிகளை மேற்பார்வையிடும் பணியினை சிவபிரகாஷ் என்பவர் செய்து வருகிறார்.அவரிடம் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள் மற்றும் பெண்கள் உடைமாற்றும் வீடியோக்கள் அதிகம் இருப்பதாக பயத்தில் தெரிவித்திருக்கிறார்.இதையடுத்து சிவபிரகாஷிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.உடனடியாக அவரது செல்போனையும் ஆய்வு செய்தனர்.அதில் ஏராளமான வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் சிவபிரகாஷை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது பல அதிர்ச்சி தகவல்களை அவர் தெரிவித்தார். 'பெரும்பாலும் எனக்கு இரவு பணி தான் ஒதுக்கப்படும்.
அப்போது பெண்கள், நர்ஸ்கள் உடைமாற்றும் அறையில் என்னுடைய செல்போனை யாரும் இல்லாத நேரத்தில் வைத்து விடுவேன்.மறுநாள் யாருக்கும் தெரியாமல் அதனை எடுத்து விடுவேன்.அதில் பெண்கள் உடைமாற்றும் வீடியோக்களும்,அவர்களின் உரையாடல்களும் இடம் பெற்றிருக்கும்' என காவல்துறையினரின் விசாரணையில் சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிவபிரகாஷை கைது செய்த காவல்துறையினர் அவரது செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார்கள்.இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காவல்துறையினர் 'தற்போது சிவபிரகாஷின் செல்போனை ஆய்வு செய்து வருகிறோம்.முழுமையான ஆய்விற்கு பின்னர்தான் எத்தனை வீடியோக்கள் உள்ளன என்பதைச் உறுதியாக சொல்ல முடியும்.
மேலும் சம்பந்தப்பட்ட பெண்கள், நர்ஸ்களின் எதிர்கால நலன்கருதி வீடியோக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சிவபிரகாஷ் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.சிவபிரகாஷ் தவிர வேறு எந்த நபருக்காது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்கள்.