2.O படத்தின் 'உண்மையான' பக்ஷி ராஜன் இவர்தான்.. புதிய தகவல்கள்!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 30, 2018 12:19 PM
சூப்பர் ஸ்டார் ரஜினி,பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடித்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்,மிகப்பெரும் பொருட்செலவில் இயக்கிய 2.O திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இப்படம் உலகம் முழுவதும் சுமார் 10,000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தில் பக்ஷிராஜன் என்ற பாத்திரம் அனைவரையும் ஈர்த்திருக்கிறது.அந்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் மிக சிறப்பாக நடித்திருந்தார்.பறவைகள் மீது அன்பு கொண்டவராக சித்தரக்கப்பட்டுள்ள பக்ஷிராஜனின் தோற்றம்,பறவையியல் மேதையான சலீம் அலியை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.
தனது வாழ்நாளில் 65 ஆண்டுகளை பறவைகளுக்காகவும்,அவற்றை ஆராய்வதற்காகவும் மேலும் அதனை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் செலவழித்த இவர் இந்தியாவின் பறவை மனிதர் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இவரின் பெயரில் பறவைகள் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.