காயல் குளமான கேரளா.. கனமழைக்கு 20 பேர் பலி!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Aug 09, 2018 03:57 PM
கேரளாவில் இரண்டு வாரங்களுக்கு மேலாக பெய்துவரும் கனமழையினால் மாநிலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் துயர வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். இதனை அடுத்து, கூடுதலாக 6 தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்ப வேண்டி மத்திய அரசிடம் கேரள முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக 3 தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும், கடலோர காவல்படை குழுவினரும் கேரளா வந்தடைந்தனர். கேரளாவின் கரையோர மக்களுக்கு கனமழை காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் 26 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று மீண்டும் கேரளாவின் இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளதால் மேலும் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறும் கேரள மக்கள் தற்போது ராணுவம் மற்றும் கப்பற்படை உதவியை கோரியுள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் இதுவரை கனமழையால் பாதிக்கப்பட்டு 20 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.