அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும்
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 07, 2018 04:21 PM
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், ''தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. இது ஒரிசா அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலில் வரும் 12-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.சென்னையில் பரவலான மழை பெய்யும். வடகிழக்கு பருவ மழைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது,'' என்றார்.
முன்னதாக தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 'ரெட் அலெர்ட்'டை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags : #HEAVYRAIN #WEATHER