'வருகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை'...சென்னைக்கு மழை எப்போது?

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 28, 2018 04:08 PM
Heavy rain expected in chennai

தமிழகத்தில் நாளை மழை தொடங்க வாய்ப்பிருப்பதாகவும்,வரும்  டிசம்பர் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும்,இதனால் பரவலான மழையினை எதிர்பார்க்கலாம் என  தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது ''மாலத்தீவு அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நாளை தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கும். இதனால் வடகிழக்கு காற்று தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் நுழையும் சாதக சூழல் உள்ளது.இதனால் நாளை தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

மேலும்,டிசம்பர் 5-ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இலங்கைக்கு தென் கிழக்கே உருவாகும் இந்த காற்றழுத்த  தாழ்வு நிலை சற்று வலிமை கொண்டதாக உருவாகும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் புயல் சின்னமாக மாறவும் வாய்ப்புள்ளது.இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது. மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்''என செல்வகுமார் தெரிவித்துள்ளார்.