
சென்னை குன்றத்தூரை சேர்ந்த தஷ்வந்த், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்தார்.
தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் டிசம்பர் 2-ம் தேதி தனது தாயைக் கொலை செய்து நகைகளுடன் மும்பை தப்பினார்.
தனிப்படை போலீசார் மும்பை சென்று தஷ்வந்தைக் கைது செய்தனர். தொடர்ந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தஷ்வந்தை ஆஜர்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் இன்று ஆஜரான தஷ்வந்தை ஆள்கடத்தல், கொலை உட்பட 5 பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
BY MANJULA | FEB 19, 2018 3:13 PM #HASINIMURDERCASE #DHASVANTH #ஹாசினிகொலைவழக்கு #தஷ்வந்த் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories