'ஊருக்கே சோறு போட்ட உங்களுக்கு நான் துணை நிற்பேன்'...ட்விட்டரில் உருகிய பிரபல கிரிக்கெட் வீரர்!
Home > News Shots > தமிழ்By Jeno | Nov 19, 2018 02:55 PM
கஜா புயலின் கோர தாண்டவத்தால்,டெல்டா மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
"ஊருக்கே சோறுபோட்ட தமிழக டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது,உங்களோடு நான் துணை நிற்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம். முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே என்று தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயலின் போது பலத்த காற்று வீசியது. இதனால் மொத்தம் 1 லட்சத்து 70,454 மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் மற்றும் கனமழை காரணமாக 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படை தேவையை தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோர்ப்போம்.முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே.#GajaCyclone #SaveDelta #WeNeedToStandWithDelta pic.twitter.com/uzhbOCIsCm
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 19, 2018