
பெரியார் சிலை விவகாரத்தில் எச்.ராஜாவுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், எச்.ராஜா தான் தெரிவித்த கருத்துக்கு இன்று தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதில், அந்த பதிவு தன் அனுமதியின்றி பதிவிடப்பட்டுள்ளதாகவும், கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு தன் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
BY SATHEESH | MAR 7, 2018 9:44 AM #HRAJA #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories