ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில்: ஆன்லைனில் கூட்ட நெரிசல்..!
Home > News Shots > தமிழ்By Siva Sankar | Oct 10, 2018 06:29 PM
அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக அதிக இந்தியர்கள் உள்ளனர். அவ்வப்போது சில பல சலுகைகளை அளிக்கும் இந்த நிறுவனங்கள் தற்போது தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு ஏறக்குறைய ரூபாய் 7 ஆயிரம் கோடி அளவில் ஸ்மார்ட் போன்களை விற்கிறது.
எனினும் ஆடி ஷாப்பிங் ஜவுளிக்கடைகளில் அறிவிக்கப்படுவது போல, இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் தான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பண்டிகைகள் வந்தால் போது ஆன்லைனில் குறிப்பிட்ட விழுக்காடு தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன.
அதிலும் முதன்மையான சலுகைகள் கொடுக்கப்படுவது ஸ்மார்ட் போன்களுக்குத்தான் என்பது நிதர்சனமான உண்மை; ஆம் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களில் நடப்பு வாரத்தில் விற்கப்படும் இந்த 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களின் விலைகள் ஏறக்குறைய 60 சதவீதம் சலுகைகளில் விற்கப்படுகின்றன என்பதால் ஆன்லைன் ஷாப்பிங் மால்களில் ஒரே கூட்ட நெரிசல்தான்!