'கூகுள் பிளே ஸ்டோர்னு நம்பி உள்ள போய்றாதீங்க'.. ஆண்ட்ராய்டு மொபைல்களை அச்சுறுத்தும் மால்வேர்!
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 15, 2018 04:47 PM
ஆண்ட்ராய்டு மொபைல்களை அச்சுறுத்தும் விதமாக, கூகுள் பிளே ஸ்டோர் பெயரிலேயே புதிய மால்வேர் ஒன்று உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
GPlayed எனப்படும் இந்த ட்ரோஜனின் பெயர், ஆண்ட்ராய்டில் Google Play Marketplace என்பதாகும். பார்க்க உண்மையான ப்ளேஸ்டோர் போலவே தோற்றமளிக்கும் இது, நமது மொபைலுக்குள் புகுந்துவிட்டால் எளிதில் நம் தகவல்களைத் திருடிவிடும். அமைதியாக மொபைல் பேக்கிரவுண்டில் இயங்கும் இதன் மூலம் நமது போனில் புதிய நெட் புரோகிராம்களை ரன் செய்யவும், plug இன்களை இன்ஸ்டால் செய்யவும் முடியும்.
காண்டாக்ட்ஸ், மெசேஜ்கள்,பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இதனால் எளிதில் திருட முடியும். தற்போது சோதனை நிலையில் இருக்கும் இந்த ட்ரோஜன் ரஷ்ய ஹேக்கர்களின் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் போலி ஆப்களை டவுன்லோடு செய்யாமல் இருப்பது, தேவைப்படும் ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரில் நேரடியாக சென்று டவுன்லோடு செய்து கொள்வது ஆகியவற்றின் வழியாக இந்த மால்வேரிடம் இருந்து நமது மொபைலை பாதுகாத்துக் கொள்ளலாம்.
பிறரிடம் இருந்து வாங்கும் ஆப்களையும் முறையாக ஸ்கேன் செய்து பயன்படுத்துவது உங்களுக்கும் நல்லது, உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கும் நல்லது.